பைத்தியமா நீ..? ஜோசப் விஜய்ன்னு சொன்னா எவனுக்கோ வலிக்குதாம்… அதுதானே அவரோட உண்மையான பேரு… சீமானை மறைமுகமாக வெளுத்து வாங்கிய விஜயலட்சுமி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பைத்தியமா நீ..? ஜோசப் விஜய்ன்னு சொன்னா எவனுக்கோ வலிக்குதாம்… அதுதானே அவரோட உண்மையான பேரு… சீமானை மறைமுகமாக வெளுத்து வாங்கிய விஜயலட்சுமி..!!

Published

on

“ஜோசப் விஜய் என்று சொன்னால் எவனுக்கோ வலிக்குதாம், அதுதானே முதலமைச்சரின் உண்மையான பெயர்” என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை நடிகை விஜயலட்சுமி மறைமுகமாக மிகக் கடுமையாகச் சாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அண்மையில் த.வெ.க தலைவர் விஜய், ‘ஜனநாயகன்’ என்ற தனது திரைப்படப் பெயர்ப்பலகையில் “ஜோசப் விஜய்” என்று குறிப்பிட்டிருந்தது குறித்துச் சீமான் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்பொழுது எக்ஸ் (X) தளத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், த.வெ.க தலைவர் விஜய் எதைச் செய்தாலும் ஒரு தரப்பினர் திட்டமிட்டு விமர்சனம் செய்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். “விஜய் பேசினாலும் தப்பு, பேசவில்லை என்றாலும் தப்பு; சும்மா எதையாச்சும் சொல்லிக்கிட்டே இருக்கிறது. இப்படி தேவையில்லாமல் பேசிக்கொண்டு இருப்பவர்களைப் பார்த்துக் கேட்கிறேன், பைத்தியங்களா நீங்க?” என்று விஜயலட்சுமி மிக ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார். விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிறகு அவர் மீதான விமர்சனங்கள் எல்லை மீறுவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Advertisement

முன்னதாக, த.வெ.க தலைவரின் பெயரைச் சுட்டிக்காட்டி அரசியல் மேடைகளில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட சூழலில், விஜயலட்சுமியின் இந்தத் திடீர் ஆதரவு அரசியல் வட்டாரத்தில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. த.வெ.க அரசு மற்றும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஆதரவாக நடிகை விஜயலட்சுமி களமிறங்கிப் பேசியுள்ள இந்த வீடியோ, சமூக ஊடகங்களில் தற்பொழுது பயங்கரமாகப் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in