LATEST NEWS
“இது என்னப்பா புது உருட்டா இருக்கு..?” காற்றில் கை, காலை அசைச்சதுக்கே லைசென்ஸா..?! கார் இல்லாமலேயே டிரைவிங் டெஸ்ட் பாஸ் செய்த நபர்..!சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகும் ஷாக்கிங் வீடியோ..!!
சாலைகளில் வாகனம் ஓட்டுவதற்கு முன்பாக ஓட்டுநர் பயிற்சி பெறுவதும், பின்னர் தேர்வு எழுதி உரிமம் பெறுவதும் மிகவும் பொறுப்பான செயலாகும். ஆனால், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, ஓட்டுநர் தேர்வின் முழு நடைமுறையையுமே கேள்விக் குறியாக்கியுள்ளது. ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த வீடியோவில், ஒரு மூடிய அறைக்குள் நாற்காலியில் விண்ணப்பதாரர் அமர்ந்திருக்க, அவருக்கு எதிரே அதிகாரிகள் சிலரும் அமர்ந்துள்ளனர். அந்த அறையில் கார் எதுவுமே இல்லாத நிலையிலும், அங்கிருந்த அதிகாரிகள் அந்த நபரிடம் காரை ஓட்டுமாறு கூறுகின்றனர். மேலும், ஆக்சிலரேட்டரை அழுத்துமாறும், பிரேக் பிடிக்குமாறும், கியர் மாற்றுமாறும் அவருக்கு அறிவுறுத்தல்கள் வழங்குகின்றன.
இதையடுத்து, நாற்காலியில் அமர்ந்தபடியே அந்த நபர் உண்மையில் கார் ஓட்டுவது போல் காற்றில் கைகளையும் கால்களையும் அசைத்து நடிக்கத் தொடங்குகிறார். கையால் ஸ்டீயரிங்கை திருப்புவது போலவும், காலால் பிரேக் மற்றும் ஆக்சிலரேட்டரை அழுத்துவது போலவும் பாவனை செய்கிறார். சில வினாடிகளுக்கு இந்த நாடகம் நீடித்த நிலையில், அங்கிருந்த அதிகாரி “மாஷா அல்லாஹ், நீங்கள் தேர்ச்சி பெற்றுவிட்டீர்கள்” எனக் கூறி அவரைப் பாஸ் செய்கிறார். நிஜக் கார் இல்லாமல் காற்றில் கை, கால்களை அசைத்ததற்காகவே அவருக்கு ஓட்டுநர் தேர்வு வெற்றி சான்றிதழ் அளிக்கப்பட்டது பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
https://www.instagram.com/reel/Db5_bJQJgL8/?utm_source=ig_web_button_share_sheet
இந்த வீடியோ வெளிவந்த பிறகு சமூக வலைதளங்களில் மக்கள் பெரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர். பலர் இது ஓட்டுநர் தேர்வு போலத் தெரியவில்லை, மாறாக ஒரு நகைச்சுவைக் காட்சி போல இருப்பதாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். ‘howorldworks’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை 6 லட்சத்து 79 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். நிஜமான கார் இல்லாமல் வெறும் பாவனைக்கே ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டால், சாலையில் செல்லும் பொதுமக்களின் பாதுகாப்பு எப்படி உறுதி செய்யப்படும் என்ற முக்கியமான கேள்வியையும் இந்த வீடியோ எழுப்பியுள்ளது.
