LATEST NEWS
“தவறுதலாக வண்டி நகர்ந்தது..!” போதையில் கார் ஏற்றிய துருக்கி ஓட்டுநர்… 61 வயது முதியவருக்கு நேர்ந்த கொடூரம்.. நீதிமன்றத்தின் வரலாற்றில் இதுவரை இல்லாத கடுமையான தீர்ப்பு..!!
போதையில் வாகனம் ஓட்டிச் சென்று சாலையைக் கடந்த 61 வயது பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணியை செனாய் கோபரால் என்ற துருக்கி நாட்டு ஓட்டுநருக்கு மோதி கொன்றார். இந்த சம்பவ வீடியோ வைரலானதையடுத்து அந்நாட்டு நீதிமன்றம் கொலையாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. தான் தவறுதலாக காரை முன்னோக்கி இயக்கியதாக ஓட்டுநர் வைத்த வாதத்தை நீதிமன்றம் முற்றிலுமாக நிராகரித்ததுடன், இது முன்யோசனையுடன் திட்டமிட்டுச் செய்யப்பட்ட செயல் என்று கூறி இந்தத் கடும் தண்டனையை வழங்கி உள்ளது.
– قضت المحكمة التركية بالسجن المؤبد المُشدَّد على السائق التركي (شيناي كوبارال – Şenay Koparal) البالغ من العمر 55 عامًا، بعدما قاد سيارته مخمورًا وصدم سائحة بريطانية تبلغ من العمر 61 عامًا أثناء عبورها الطريق.
– وبرغم ادعاء السائق أنه حرّك السيارة إلى الأمام عن طريق الخطأ، رفضت… pic.twitter.com/yQFUtqUWPV— Badr (@ii0d20) August 13, 2026
கொலை வழக்குகளில் துருக்கி நீதித்துறை வழக்கமாகத் மென்மையான போக்கோடு நடந்து கொள்ளும் நிலையில், இந்த வழக்கில் இவ்வளவு கடுமையான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், உயிரிழந்தவர் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் தான் வழக்கு இவ்வளவு தீவிரமாகக் கையாளப்பட்டதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
