“என் அம்மாவைக் காப்பாத்துங்க..!” நீரில் மூழ்கிய காரில் இருந்து வந்த அலறல் சத்தம்… நொடியில் பாய்ந்த 5 நண்பர்கள்…! லக்கிம்பூரில் நடந்த நிஜ ஹீரோக்களின் அதிரடி மீட்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் அம்மாவைக் காப்பாத்துங்க..!” நீரில் மூழ்கிய காரில் இருந்து வந்த அலறல் சத்தம்… நொடியில் பாய்ந்த 5 நண்பர்கள்…! லக்கிம்பூரில் நடந்த நிஜ ஹீரோக்களின் அதிரடி மீட்பு..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில், நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நீர் நிரம்பியிருந்த ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து மூழ்கத் தொடங்கியது. போனில் பேசியபடி திடீரென குறுக்கே வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீது மோதாமல் இருக்க காரை திருப்ப முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இந்தத் விபத்து நேரிட்டது. காரில் இரண்டு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் உட்பட மொத்தம் ஐந்து பேர் பயணம் செய்தனர்.

கார் தண்ணீரில் மூழ்கத் தொடங்கியதைக் கண்டதும், அங்கு இருந்த ஐந்து நண்பர்கள் சற்றும் யோசிக்காமல் உடனடியாக அந்த ஆழமான நீர்ப் பள்ளத்தில் குதித்தனர். கார் மெல்ல மெல்ல நீரில் மூழ்கிக் கொண்டிருந்ததால், அதற்குள் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். காரில் இருந்த பெண் ஒருவர் “என் அம்மாவைக் காப்பாற்றுங்கள்” என்று பதறியபடி கூச்சலிட்ட நிலையில், அந்த வாலிபர்கள் சாதுரியமாகச் செயல்பட்டு காரின் கதவுகளைத் திறந்து போராடி அனைவரையும் மீட்டனர்.

Advertisement

வாலிபர்களின் இந்த வேகமான செயலை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை “மனித உருவில் வந்த தேவதைகள்” எனப் பாராட்டினர். மீட்கப்பட்ட 5 பேரில் ஒரு பெண்ணுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்ட நிலையில், உடனடியாக வரவழைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் மூலம் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த பரபரப்பான மீட்புப் பணியை அங்கிருந்தவர்கள் வீடியோவாகப் பதிவு செய்ய, தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in