LATEST NEWS
பகீர்..! இமயமலையை உலுக்கிய நிலநடுக்கம்.. அதிர்வால் உடைந்த பனிப்பாறை.. நேபாள வெள்ளத்தின் பின்னணியில் காலநிலை மாற்றத்தின் அதிர்ச்சித் தாக்குதல்.. பரபரப்பு பின்னணி..!!
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். வெள்ளத்தினால் வீடுகள், பாலங்கள் மற்றும் தொடர்பு நெட்வொர்க் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. காணாமல் போன சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களைத் தேடும் பணியில் நேபாள ராணுவத்தின் ஹெலிகொப்டர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இப் பேரிடரில் சிக்கியவர்களை மீட்க இந்தியா சார்பில் போர்வைகள் மற்றும் மருந்துகள் உட்பட 10 டன் நிவாரணப் பொருட்கள் விமானப் படை விமானங்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.
- திபெத் எல்லை அருகே ஏற்பட்ட 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும், அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த பனிப்பாறை சரிவுமே இந்த வெள்ளப்பெருக்குக்கு முக்கியக் காரணமாகும். நிலநடுக்கத்தின் அதிர்வால் உடைந்த பனிப்பாறைகள் லெண்டே ஆற்றில் விழுந்து, நீரோட்டத்தை ஓர் அணை போலத் தடுத்து நிறுத்தியுள்ளன. அவ்வாறு தேங்கி நின்ற நீர் அழுத்தம் தாங்காமல் ஒரே நேரத்தில் உடைந்ததால், அதன் துணை ஆறான போதே கோஷி ஆற்றுப்பகுதியில் பெரும் சீற்றத்துடன் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்ந்தது.
- இமயமலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக நிலவிய அதிக வெப்பநிலை காரணமாக பனிப்பாறைகள் உருகி, அவற்றின் அடிப்பகுதி பிடிப்புத் தளர்ந்து வலுவிழந்து காணப்பட்டன. மனித செயல்பாடுகளால் உருவாகும் காலநிலை மாற்றத்தினால் இந்து குஷ் இமயமலைப் பகுதியில் பனி இழப்பு விகிதம் இருமடங்காக அதிகரித்துள்ளது. ஏற்கனவே பலவீனமாக இருந்த பனிப்பாறைகள், நிலநடுக்கத்தின் அதிர்வைச் சந்தித்தபோது எளிதில் உடைந்து சரிந்து விழுந்து இந்த பெரிய பேரிடரை ஏற்படுத்தியுள்ளன.
