LATEST NEWS
“ஆற்றின் நடுவே மிதந்த பலமாடி கட்டிடம்.. இடிந்து விழும் முன் அரங்கேறிய மாஸ் ஆக்ஷன்..!” டி-ஷர்ட்டை காட்டி ராணுவ ஹெலிகாப்டரை அழைத்த சிறுவன்.. வைரல் வீடியோ..!!
நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட கொடூர காட்டாற்று வெள்ளத்தில், ஆற்றங்கரையில் இருந்த பல மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று அடியோடு அடித்துச் செல்லப்பட்டு, ஆற்றின் நடுவே எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் சிக்கிக்கொண்ட பதைபதைக்கும் மீட்புப் போராட்ட வீடியோ இணையத்தை உலுக்கி வருகிறது. அந்த மெகா கட்டிடத்தின் மிக உயரமான மொட்டை மாடியில் சிக்கிக்கொண்ட ஒரு சிறுவன், மரண பயத்தின் உச்சத்தில் தன் உயிரைக் காப்பாற்றக் கோரி தனது டி-ஷர்ட்டைக் கழற்றி வானில் பறக்கவிட்டு, அங்கே மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டரை நோக்கி உதவி கேட்டு அழுது சைகை செய்துள்ளான். சுற்றிலும் அசுர வேகத்தில் வெள்ளம் சீறிப்பாய்ந்து கொண்டிருந்த அந்த ஆபத்தான வான்வெளிச் சூழலிலும், நேபாள ராணுவ ஹெலிகாப்டர் சற்றும் பின்வாங்காமல் அந்த மாடிக்கு நேராகச் சென்று மெல்ல மெல்லக் கீழே இறங்கி வந்துள்ளது.
https://twitter.com/hindipatrakar/status/2092569416374608374/video/1
ஹெலிகாப்டர் மாடியின் விளிம்பிற்கு மிக மிக அருகில் இறங்கி வந்த அந்த உறைந்துபோக வைக்கும் நொடில், சிறுவன் ஹெலிகாப்டரின் அடிப்பகுதியைத் தொட்ட அடுத்த கணமே, மேலே அமர்ந்திருந்த வீரர் மின்னல் வேகத்தில் அவனது கைகளைப் பற்றிப் பிடித்து அசுர பலத்துடன் ஹெலிகாப்டருக்குள் இழுத்துக் காப்பாற்றியுள்ளார். மாடி இடிந்து விழும் சில விநாடிகளுக்கு முன்பாக அரங்கேறிய இந்த நெஞ்சை உலுக்கும் ‘மாஸ் ஆபரேஷன்’ வீடியோ வைரலாகி வீரமிக்க மீட்புப் போராட்டத்திற்கு உலகெங்கிலும் உள்ள நெட்டிசன்கள் தற்போது தங்களது மரண மாஸ் பாராட்டுகளையும் லவ் நோட்டுகளையும் குவித்து வருகின்றனர்.
