LATEST NEWS
“என் அம்மா ஒரு விவசாயி… 6 வயதிலேயே தாயை இழந்தவன்… விவசாயிகளின் கஷ்டம் எனக்கு நல்லாவே தெரியும்…!” மேடையில் ஆதவ் அர்ஜூனா உருக்கம்..!!
சென்னையில் நடைபெற்ற மத நல்லிணக்க மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, அரசியலில் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை என்ற பாகுபாடு இருக்கக்கூடாது என்றும், அனைவரும் சமம் என்ற நிலை ஏற்படுவதுதான் தவெக-வின் நோக்கம் என்றும் கூறினார். பல அரசியல் கட்சிகள் இஸ்லாமியர்களுக்குத் தாங்கள்தான் பாதுகாப்பு என்று கூறிவரும் நிலையில், வெறும் பாதுகாப்பு கொடுப்பது மட்டுமே அரசியலாகிவிடாது எனக் குறிப்பிட்ட அவர், அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுப்பதுதான் உண்மையான சமத்துவ அரசியல் என்றும், குடிசை வீட்டில் இருந்து கோட்டைக்கு வருவதே உண்மையான அரசியல் மாற்றம் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் பேசிய அவர், பெரம்பூர் தொகுதியில் வேட்பாளர் பெயரை அறிவிக்கும்போது தலைவர் தைரியமாக ‘சி.ஜோசப் விஜய்’ என்று தன் பெயரை அறிவித்ததைச் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் மதச்சார்பற்ற கொள்கை சவாலாக உள்ள இந்தச் சூழலில், பிறப்பால் தான் ஒரு கிறிஸ்தவன் என்றாலும், வளர்ப்பால் அனைத்து மதத்தினராலும் அங்கீகரிக்கப்பட்டவன் எனவும், தன் சிந்தனை எல்லா மதங்களுக்கும் உரியது என்றும், பிறந்த அடையாளத்தை மறைக்காமல் செயல்பட்டவர் முதல்வர் விஜய் என்றும் புகழாரம் சூட்டினார்.
தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பகிர்ந்துகொண்ட ஆதவ் அர்ஜூனா, “எனது அம்மா ஒரு விவசாயி; எனக்கு 6 வயதாக இருந்தபோதே அவர் தற்கொலை செய்துகொண்டார். அதனால் விவசாயிகளின் கஷ்டங்கள் மற்றும் துன்பங்கள் எனக்கு நன்றாகவே தெரியும்” என்று உரையின் போது நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
