“ஐயோ கடவுளே.. வெறும் தண்ணீர் மட்டும் குடித்து 20 கிலோ குறைப்பு..!” 31 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. பெங்குவின் போல மாறும் விசித்திர வாழ்க்கை.. திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஐயோ கடவுளே.. வெறும் தண்ணீர் மட்டும் குடித்து 20 கிலோ குறைப்பு..!” 31 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. பெங்குவின் போல மாறும் விசித்திர வாழ்க்கை.. திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர், உடல் எடையைக் குறைக்க விரும்பி 15 நாட்களாக உணவு ஏதும் உட்கொள்ளாமல் வெறும் தண்ணீரை மட்டுமே குடித்து வந்த தீவிர உணவுக்கட்டுப்பாட்டால், 20 கிலோ எடையை இழந்ததோடு ‘வெர்னிக்கின் என்செபலோபதி’ என்ற உயிருக்கு ஆபத்தான மூளைக் கோளாறு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தீவிர ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக உடலில் வைட்டமின் பி1 பற்றாக்குறை ஏற்பட்டதால் தான் இவருக்கு இந்த நரம்பியல் கோளாறு ஏற்பட்டுள்ளது என மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. ‘பிகு’ என்ற பண்டைய தாவோயிச வழிமுறையைப் பின்பற்றி, 160 செ.மீ உயரமும் 70 கிலோ எடையும் இருந்த அந்தப் பெண் இந்த விபரீத முயற்சியைக் கையாண்டுள்ளார்.

இந்தக் கொடூரமான மூளை பாதிப்பால் தீவிர நினைவாற்றல் இழப்பு, குழப்பம் மற்றும் கண்களை அசைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதோடு, அவரது உடலின் சமநிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுப் ‘பெங்குவின்’ பறவையைப் போலத் தள்ளாடி நடக்கும் விசித்திர நிலைக்கு ஆளாகியுள்ளார் என்று அவருக்குச் சிகிச்சையளித்த நரம்பியல் நிபுணர் சுன் கைஃபாங் எச்சரித்துள்ளார். தற்போது சீன சமூக வலைத்தளங்களில் உடல் எடையைக் குறைப்பதற்காகவும், நச்சுக்களை வெளியேற்றுவதற்காகவும் இத்தகைய ஆபத்தான வெறும் தண்ணீர் உணவுக்கட்டுப்பாட்டு முறைகள் ட்ரெெண்டாகி வரும் வேளையில், மருத்துவக் கண்காணிப்பு இல்லாமல் செய்யப்படும் நீண்ட காலப் பட்டினி மரணம் மற்றும் நிரந்தர உடல் உறுப்புச் செயலிழப்பிற்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in