LATEST NEWS
“எனக்குப் பசிக்குது அம்மா..!” அழுகிய தாயின் சடலம் அருகே துப்பாக்கிக் காயத்தோடு அழுத பிஞ்சு குழந்தை.. உலகையே உலுக்கிய கொடூரம்.. நெட்டிசன்களை கண் கலங்க வைத்த வீடியோ..!!
எத்தியோப்பியாவின் ஒரோமியா பிராந்தியத்தில் உள்ள கிழக்கு வொல்லேகா பகுதியில், கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி ஒரோமியா பிராந்திய கெடா கமாண்டோ படைகளால் அம்ஹாரா இனத்தைச் சேர்ந்த தாய் ஒருவர் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், பல நாட்களாகத் தனது தாயின் அழுகிய சடலத்தின் அருகிலேயே பசியோடும் துப்பாக்கிச் சூட்டுக் காயத்தோடும் அமர்ந்திருந்த அவரது பிஞ்சு மகள் மீட்கப்பட்ட நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இக்கொடூரத் தாக்குதல் நடந்து பல நாட்களுக்குப் பிறகு அந்தத் தாயின் சடலம் கண்டறியப்பட்ட போது, துப்பாக்கிக் குண்டு பாய்ந்து படுகாயமடைந்திருந்த அந்தச் சிறு குழந்தை பசியின் கொடுமையால் வாடி, “எனக்குப் பசிக்கிறது” என்று அழுதுகொண்டே தனது தாயின் உடலின் அருகிலேயே அமர்ந்திருந்த உறைந்துபோக வைக்கும் காட்சி மீட்புக் குழுவினரையே கண்ணீர்க் கடலில் மூழ்கடித்துள்ளது.
🚨 Amhara mother killed by Oromia Region Geda Commando forces; wounded young daughter found beside her body days later
An Amhara mother was killed on August 21 during attacks by Oromia Region Geda Commando forces in East Wollega Zone, Oromia Region. Her body was discovered… https://t.co/aZAbBLPV9n pic.twitter.com/axrsHhCIHs— ነብዩ (@neby_G) August 25, 2026
கடந்த ஆகஸ்ட் 18 முதல் கிழக்கு வொல்லேகா மண்டலத்தில் வசிக்கும் அம்ஹாரா சமூகத்தினரைக் குறிவைத்து ஒரோமியா பிராந்திய சிறப்புப் படைகள், கெடா கமாண்டோக்கள், ‘கெர்ரோ’ என்றழைக்கப்படும் ஒரோமோ இளைஞர் குழுக்கள் மற்றும் எத்தியோப்பிய தேசிய பாதுகாப்புப் படை ஊழியர்கள் இணைந்து இந்த மெகா இனவாதப் படுகொலைத் தாக்குதலைத் திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளனர். அங்கிருந்து தப்பியோட முடியாத கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் ஆதரவற்ற அப்பாவிப் பொதுமக்களைக் குறிவைத்து இந்த ஆளும்கட்சிப் படையினர் வீடு வீடாகப் புகுந்து கொடூரமான முறையில் அசுரத்தனமான வேட்டையை நடத்தியுள்ளனர். உலக நாடுகளின் மனித உரிமை அமைப்புகளையே உ உறைய வைத்துள்ள இந்த அநாகரிக அராஜகப் படுகொலை மற்றும் பிஞ்சு குழந்தையின் பாசப் போராட்ட வீடியோ தற்போது சர்வதேச அளவில் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி, ஒட்டுமொத்த நெட்டிசன்களின் இதயங்களையும் சுக்குநூறாக உடைத்து வருகிறது.
