LATEST NEWS
“அடப்பாவமே..! 20 நிமிட வேலைக்கு ரூ.12,000 ஆ..?” வெறும் கூரை அடைப்பை எடுக்க 92 பவுண்ட் கட்டணம் வசூலித்த ஊழியர்..! இங்கிலாந்தின் கூலி உயர்வைக் கண்டு மிரண்டுபோன இந்தியப் பெண்ணின் வைரல் வீடியோ..!!
வெளிநாட்டில் வேலை செய்து வசதியாக வாழ வேண்டும் என்ற ஆசையோடு பல இந்தியர்கள் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குச் செல்கின்றனர். அங்கு வருமானம் சிறப்பாக இருந்தாலும், அன்றாட வாழ்க்கைப் பராமரிப்புக்கான செலவுகள் பல நேரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, வீட்டின் சிறு சிறு பழுதுபார்ப்பு மற்றும் தூய்மைப் பணிகளுக்கான கூலித் தொகை இந்தியாவில் உள்ளதை விடப் பல மடங்கு அதிகமாக இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இங்கிலாந்தில் வசிக்கும் மஞ்சு ஷேகாவத் பர்மர் என்ற இந்தியப் பெண், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது வீட்டின் கூரை வடிகால் பகுதியில் இலைகள், மண் மற்றும் குப்பைகள் அடைத்துக்கொண்டதால், அதைச் சுத்தம் செய்ய ஒரு பணியாளரை அழைத்துள்ளார். அந்தப் பணியாளர் ஏணி மற்றும் உபகரணங்களுடன் வந்து கூரை வடிகாலில் இருந்த கழிவுகளை 20 நிமிடங்களில் சுத்தம் செய்து முடித்தார். இந்த 20 நிமிடப் பணிக்குக் கூலியாக அவர் 92 பவுண்டுகள் இந்திய மதிப்பில் சுமார் ரூ.12,000 கேட்டுள்ளார். இதைக் கேட்டு அந்தப் பெண் பெரும் அதிர்ச்சியடைந்தார்.
https://www.instagram.com/reel/DcXvYIPsjkX/?utm_source=ig_web_button_share_sheet
வீடியோவின் இறுதியில், “இதே வேலையை இந்தியாவில் செய்தால் எவ்வளவு செலவாகும்?” என்று அந்தப் பெண் பயனர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இக்கட்டான இந்த வினா சமூக வலைதளங்களில் காரசாரமான மற்றும் வேடிக்கையான விவாதத்தை உருவாக்கியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்; அதில் ஒரு பயனர் “இந்தியாவில் இவ்வளவு பணத்தில் தேநீரும் குட்காவும் கூடச் சேர்த்துக் கிடைத்துவிடும்” என நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் சிலர், இந்தியாவில் கூரை அமைப்பு மற்றும் பராமரிப்பு முறைகளே வேறு விதமாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
