முதியோர்களுக்கு சூப்பர் நியூஸ்..! பெற்றோரைத் தவிக்கவிட்டால் சொத்து காலி..! பிள்ளைகளை வீட்டை விட்டே துரத்த உத்தரப் பிரதேச அரசு அதிரடிச் சட்டம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

முதியோர்களுக்கு சூப்பர் நியூஸ்..! பெற்றோரைத் தவிக்கவிட்டால் சொத்து காலி..! பிள்ளைகளை வீட்டை விட்டே துரத்த உத்தரப் பிரதேச அரசு அதிரடிச் சட்டம்..!!

Published

on

பெற்றோரைப் பராமரிக்காத பிள்ளைகளைச் சொத்திலிருந்து வெளியேற்ற வழிவகை செய்யும் புதிய சட்டத் திருத்தத்திற்கு உத்தரப் பிரதேச அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதியோர்களின் பாதுகாப்பையும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்யும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பெற்றோரைத் தவிக்கவிடும் பிள்ளைகளுக்குச் சொத்தில் உரிமை இல்லை என்பதுடன், அவர்கள் சட்டப்பூர்வமாக வீட்டிலிருந்தும் வெளியேற்றப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய சட்டத்தின் கீழ் பெறப்படும் முதியோர்களின் புகார்கள் மீது 30 நாட்களுக்குள் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட முதியோர்கள் தங்களது புகார்களை எளிதாகப் பதிவு செய்வதற்காக விரைவில் பிரத்யேக கட்டணமில்லாத் தொலைபேசி எண் (Toll-Free Number) ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in