CINEMA
தண்ணீருக்கே இவ்வளவு செலவா?! 35 வருஷமா மாறாத நாகார்ஜுனாவின் இளமைக்கு பின்னால் இருக்கும் ‘விலைமதிப்பற்ற’ உண்மை! நெட்டிசன்கள் ஷாக்..!!
தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தனது தனித்துவமான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்திருப்பவர் நடிகர் நாகார்ஜுனா. நடிகை அமலாவை மணமுடித்த இவரின் மகன் நாக சைதன்யாவும் தற்போது சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். மகன் ஹீரோவாக நடிக்கும் இந்த காலகட்டத்திலும், நாகார்ஜுனா தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். 66 வயதாகும் இவரின் இளமையான தோற்றம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் ஒன்றாகும். குறிப்பாக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படத்தில் அவரது கம்பீரமான மற்றும் இளமையான தோற்றத்தைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்தனர்.
இந்நிலையில், அவரது இந்தத் தளராத இளமைக்கான ரகசியம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் நாகார்ஜுனா கலந்துகொண்டபோது, அவர் அருந்திய தண்ணீர் பாட்டிலின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. அவர் குடிப்பது சாதாரண தண்ணீர் அல்ல என்றும், அது ‘டானிக் வாட்டர்’ என்று அழைக்கப்படும் சிறப்பு வகை நீர் என்றும் கூறப்படுகிறது. ஒரு லிட்டருக்கு சுமார் 500 ரூபாய் விற்கப்படும் இந்தத் தண்ணீரைத் தொடர்ந்து பருகுவதுதான், அவர் இவ்வளவு பிட்டாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதற்கு முக்கியக் காரணம் என நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
