CRIME
30 ஆண்கள்.. ஒரே ஒரு இளம் பெண்.. பட்டப்பகலில் வயலுக்குள் புகுந்து தூக்கிய வாலிபர்கள்.. நெஞ்சை பதறவைக்கும் பகீர் வீடியோ..!!
மத்திய பிரதேச மாநிலம் ராஜ்பூர் பகுதியில், விளைநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த இளம்பெண்ணை 30 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று, மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்ற நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், பெண்களின் பாதுகாப்பு குறித்த கடுமையான விவாதங்களையும் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், 25-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சாலையோரம் நின்றுகொண்டு ரகளையில் ஈடுபடுவதும், சிலர் வயலுக்குள் புகுந்து அந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக பைக்கில் ஏற்றிச் செல்வதும் பதிவாகியுள்ளது; ஆனால், இந்த அதிர்ச்சிச் சம்பவத்தின் பின்னணியில் அந்தப் பகுதியில் வாழும் பழங்குடியின சமூகத்தின் விசித்திரமான ‘பேஜா’ என்ற பாரம்பரிய வழக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
दुख हमेशा हम लड़कियों के हिस्से में ही आया है 💔 🥹
30 लड़कों ने एक लड़की का दिन दहाड़े अपहरण किया
इनके हौसले इतने बढ़ गए कि पुलिस का भी खौफ नहीं
लड़कियों यहां जन्म लेना ही पाप हे 🥹
यह मंजर मेरे लिए असहनीय ओर कातर हे pic.twitter.com/oAUwluu1xX— श्रेया (@SHREYACHOUHAN0) July 10, 2026
கடத்தப்பட்ட இளம்பெண்ணுக்குச் சில காலத்திற்கு முன்பு நிஹாலி கிராமத்தைச் சேர்ந்த ஹுகும் ராவத் என்பவருடன் திருமணம் நடந்துள்ள நிலையில், இந்த ‘பேஜா’ வழக்கத்தின்படி மணமகன் வீட்டார் மணமகளின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளனர். ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்ட பிறகும் மணமகள் வீட்டார் அந்தப் பெண்ணைக் கணவர் வீட்டிற்கு அனுப்ப மறுத்ததால், ஆத்திரமடைந்த கணவர் தனது மனைவியை அழைத்து வருவதற்காக 30-க்கும் மேற்பட்ட நண்பர்களைத் திரட்டிக்கொண்டு இந்தத் துணிகரக் கடத்தலில் ஈடுபட்டுள்ளார். கடந்த ஜூலை 7-ஆம் தேதி நடந்த இச்சம்பவம் குறித்து இருதரப்பிலிருந்தும் இதுவரை காவல் துறையில் எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை என்றாலும், வைரல் வீடியோவின் அடிப்படையில் ராஜ்பூர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்; இச்சமூகத்தில் பாரம்பரிய பணப் பரிமாற்ற வழக்கம் இருந்தாலும், சட்டப்படி இது குற்றமாகும் என்பதால், கட்டாயக் கடத்தல் நிரூபணமானால் கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
