LATEST NEWS
“யார் காசு கேட்டாலும்.. உன் புள்ள முதலமைச்சர் பிச்சு எடுத்துருவாரு!” மேடையில் கம்ப்ளைன்ட் கொடுத்த பாட்டி… புஸ்ஸி ஆனந்தின் கலாய் பதில்.. வைரல் வீடியோ..!!
தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் எதிர்பாராத சுவாரசியமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. நிகழ்ச்சியில் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்களிடையே அவர் உரையாடிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த எளிய மூதாட்டி ஒருவர் திடீரென அவரிடம் வந்து, சிலர் தன்னிடம் பணம் கேட்பதாகக் கூறிப் புகார் அளித்துள்ளார். மூதாட்டி கூறிய புகாரைக் கேட்டதும் பதற்றமடையாத புஸ்ஸி ஆனந்த், யார் பணம் கேட்டாலும் கண்டிப்பா கொடுக்கவே கூடாது அதெல்லாம் அந்த காலம், இப்போ அப்படி இல்லை என்று நகைச்சுவையாகவும் யதார்த்தமாகவும் பதிலளித்து அங்கிருந்த தொண்டர்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தினார்.
பாட்டி : இங்க… காசு கேக்குறாங்க .. 🙃@BussyAnand : யார் கேட்டாலும் காசு குடுக்க கூடாது, உன் புள்ளைக்கு (@TVKVijayHQ) தெரிஞ்ச பிச்சு எடுத்துடுவார் ! 😅🔥 pic.twitter.com/mi3uXvfsVU— Prakash Vijay (@PrakazVijay_Of) July 31, 2026
தொடர்ந்து பேசிய அவர், தவெக தலைவர் விஜய்யின் ‘ஸ்ட்ரிக்ட்’டான குணத்தை மேற்கோள் காட்டி, நகைச்சுவையான பாணியில் அங்கே இருந்தவர்களுக்குச் செல்லமாக எச்சரிக்கை விடுத்தார். யாராவது காசு கேட்டா கொடுத்துடாதீங்க, மீறி அப்படிப் பணம் கொடுத்து, விஷயம் தெரிந்தால் உன் புள்ள இருக்குல்ல, முதலமைச்சர் விஜய் பிச்சி எடுத்துருவாரு என்று கலாய்க்கும் பாணியிலும் அதேசமயம் எச்சரிக்கும் தொனியிலும் பேசினார். எளிய மூதாட்டியின் சந்தேகத்திற்குப் புரியும் வகையில் சிரித்தமுகத்துடன் அவர் கூறிய இந்தப் பேச்சு, தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
