CRIME
“நான் செலக்ட் ஆகல..” கடிதம் எழுதி வைத்துவிட்டு 17 வயது கிரிக்கெட் வீரர் எடுத்த கொடூர முடிவு.. நெஞ்சை உலுக்கும் சோகம்..!!
நாக்பூரில் விதர்பா கிரிக்கெட் சங்க அணியில் இடம் கிடைக்காத விரக்தியில், 17 வயதான வளர்ந்து வரும் பெண் கிரிக்கெட் வீரர் அதிதி மோரேஷ்வர் சௌகண்டே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் அகோலாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், கிரிக்கெட்டில் பெரிய சாதனை படைக்க வேண்டும் என்ற கனவோடு தனது தாயுடன் நாக்பூருக்கு வந்து கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தீவிரப் பயிற்சி பெற்று வந்தார். இருப்பினும், அணியில் தேர்வு செய்யப்படாததால் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளான அதிதி, தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பஜாஜ் நகர் காவல்துறையினர், சம்பவ இடத்திலிருந்து அதிதி எழுதிய உருக்கமான தற்கொலைக் கடிதம் ஒன்றை மீட்டுள்ளனர். அதில் “நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை” எனத் தனது தோல்வியால் அடைந்த வேதனையைக் குறிப்பிட்டுள்ளார். உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ள காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து அனைத்துக் கோணங்களிலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
