நாமக்கல்லில் பயங்கரம்..! வீட்டில் தனியாக இருந்த 75 வயது மூதாட்டி கழுத்தறுத்துக் கொடூரக் கொலை – 5 சவரன் நகைக்காக நடந்த கொடூரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

நாமக்கல்லில் பயங்கரம்..! வீட்டில் தனியாக இருந்த 75 வயது மூதாட்டி கழுத்தறுத்துக் கொடூரக் கொலை – 5 சவரன் நகைக்காக நடந்த கொடூரம்..!!

Published

on

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படை பகுதியில், வீட்டில் தனியாக இருந்த சம்பூர்ணம் (75) என்ற மூதாட்டியை மர்ம நபர்கள் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். தொடர்ந்து, அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகையையும் அந்த அக்கிரோதிகள் பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.

மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து த தடுக்க முயன்ற அவரது மகன் மீதும் அந்த மர்ம நபர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூதாட்டியைக் கொன்று நகையைக் கொள்ளையடித்துச் சென்ற குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in