LATEST NEWS
CM சார் கர்நாடகாவுக்கு போகாதீங்க… சதி நடக்குது எச்சரிக்கையா இருங்க.. உண்மையை போட்டுடைத்த அன்புமணி.. பரபரக்கும் அரசியல்..!!
மேகதாது அணை விவகாரம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முதலமைச்சர் விஜய் கர்நாடகாவிற்குச் செல்லக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். காவிரி நீர் மற்றும் மேகதாது அணை பிரச்சினை குறித்து கர்நாடக அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தினால், அது இந்த விவகாரத்தை ஒரு இருதரப்புப் பிரச்சினையாக மாற்றும் ஆபத்து இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய பேச்சுவார்த்தை முயற்சியானது தமிழ்நாட்டின் வாழ்வாதார உரிமைகளை ஒட்டுமொத்தமாக கர்நாடக அரசிடம் தாரைவார்ப்பதற்குச் சமம் என்று அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார். நீதிமன்றத் தீர்ப்புகளின்படி தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய காவிரி உரிமைகளை விடுத்து, கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வருவது தமிழகத்தின் சட்டப்பூர்வமான நிலப்பாட்டைப் பலவீனப்படுத்திவிடும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும், மேகதாது அணை விவகாரத்தில் தேசியக் கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டுமே திரைமறைவில் சதி செய்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள அன்புமணி, இந்த சதி வலையில் முதலமைச்சர் விஜய் எக்காரணம் கொண்டும் விழுந்துவிடக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார். தமிழகத்தின் நலனைக் காக்க முதல்வர் விஜய் தனது கர்நாடகப் பயண முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பாமக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
