LATEST NEWS
நாங்களே வாடகை வீட்ல இருக்கோம்… ரூ.2 கோடி இருந்தா சென்னையில் வீடு கட்ட மாட்டோமா..? சீப்பு திருடுற வேலையெல்லாம் பண்ணிட்டு இருக்காதீங்க… ரூ.100 கோடி நில முறைகேடு புகாருக்கு அமைச்சர் கொடுத்த நறுக் பதில்..!!
பழனி முருகன் கோயில் நில முறைகேடு விவகாரத்தில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சிரித்தபடியே விளக்கம் அளித்துள்ளார். “என் குடும்பத்தில் யாருடமுமே ரூ.2 கோடி அளவுக்குப் பணம் இல்லை; நாங்களே வாடகை வீட்டில்தான் வசிக்கிறோம்” என்று கூறி தன் மீதான புகார்களை அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
தன்னிடம் அவ்வளவு பணம் இருந்தால் சென்னையில் அல்லவா வீடு கட்டியிருப்போம், அதை விட்டுவிட்டு எதற்காக பழனியில் போய் இடம் வாங்கப் போகிறோம் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “இந்த சீப்பு திருடுற வேலையெல்லாம் பண்ணிட்டு இருக்காதீங்க” எனக் கூறி, தன் மீதான இந்த குற்றச்சாட்டுகளைப் புறந்தள்ளியுள்ளார்.
பழனியில் உள்ள கோயில் நில முறைகேடு தொடர்பாக, ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை வெறும் ரூ.2 கோடிக்கு வாங்கியதாக அமைச்சர் மீது புகார் எழுந்த பின்னணியில், அவர் இந்தத் திட்டவட்டமான விளக்கத்தை அளித்துள்ளார்.
