CRIME
சீ… என்ன ஜென்மம் இவன்…? பாதுகாக்க வேண்டிய கையே செய்த கொடூரம்..! இரவில் மருத்துவமனைக்குச் சென்ற சிறுமிக்கு என்ன ஆச்சு..? சிசிடிவி காட்சியில் அம்பலமான திடுக்கிடும் உண்மை..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ‘டயல்-112’ காவல் பிரிவில் பணியாற்றி வந்த அபிஷேக் யாதவ் என்ற காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசம்ஹார் மாவட்டத்தைச் சேர்ந்த அச்சிறுமியின் குடும்பத்தினர் கடந்த 4 ஆண்டுகளாகக் கோரக்பூரில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த ஜூலை 28 அன்று இரவு, மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது அக்காவுக்கு உணவைக் கொடுத்துவிட்டுத் திரும்பிய சிறுமி வீடு வந்து சேரவில்லை. குடும்பத்தினர் தேடியும் கிடைக்காததால், சிறுமியின் தந்தை பொலிஸில் புகார் அளித்தார்.
வழக்கை விசாரித்த பொலிஸார் மருத்துவமனைப் பகுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிறுமியை ஒரு காவலர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றது தெரியவந்தது. அந்த வாகனப் பதிவு எண்ணை வைத்து, காஜிப்பூரைச் சேர்ந்த காவலர் அபிஷேக் யாதவைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தவறான எண்ணத்துடன் சிறுமியை அழைத்துச் சென்றதாகவும், சிறுமி எதிர்த்ததால் அவரைக் கொலை செய்து ஆற்றில் வீசியதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். மேலும், இந்தச் சந்தேக நபர் ஏற்கனவே ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறை சென்று, பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.
காவலரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சியூடா பாலம் அருகே ஆற்றில் இருந்து சிறுமியின் உடலைக் கைப்பற்றிய பொலிஸார், உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். கோரக்பூர் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் தெரிவிக்கையில், குற்றம் சாட்டப்பட்ட காவலரை உடனடியாகப் பணியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
