CRIME
“என்னை பாலியல் சித்ரவதை செஞ்சு கொன்னுடு..!” தன் கொலைக்கே ரூ.3.30 லட்சம் கொடுத்த .. பிரிட்டிஷ் பெண்ணின் விபரீத ஆசை… அமெரிக்காவில் நடந்த நெஞ்சை நடுங்க வைக்கும் கொடூரம்..!!
பிரித்தானியாவைச் சேர்ந்த 32 வயதான இசை ஆசிரியை சோனியா எக்செல்பி, இணையதளம் வழியாக அறிமுகமான 53 வயதான ட்வைன் ஹால் என்பவரிடம் பணம் கொடுத்து, தன்னைச் சித்திரவதை செய்து கொள்ளுமாறு கோரிய அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவின் புளோரிடாவில் அரங்கேறியுள்ளது. பல ஆண்டுகளாக மனநோயால் அவதிப்பட்டு வந்த சோனியா, தீவிர பாலியல் வக்கிர எண்ணங்கள் மற்றும் தற்கொலை கற்பனைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஆன்லைன் தளம் மூலமாக ஹாலைச் சந்தித்துள்ளார். ‘ஆல்ஃபாசாடிஸ்ட்’ என்ற பெயரில் இயங்கிய ஹால், சோனியாவைத் துன்புறுத்திக் கொல்வதற்காக 4,000 டாலர்களைச் லஞ்சமாகக் கேட்டுள்ளார். தீவிர மன உளைச்சலில் இருந்த சோனியாவும் இதற்கு ஒப்புக் கொண்டு கடந்த அக்டோபர் மாதம் இங்கிலாந்திலிருந்து புளோரிடாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
புளோரிடா வந்த சோனியாவைத் தனிமையான ஒரு குடிலுக்கு அழைத்துச் சென்ற ஹால், அவரைக் கொடூரமாகச் சித்திரவதை செய்துள்ளார். அங்கு வைத்து சோனியா தனது ஆன்லைன் நண்பர் ஒருவருக்கு அனுப்பிய இறுதிச் செய்தியில், தான் மிகவும் பயந்துவிட்டதாகவும், தப்பிக்க வழியில்லை என்றும், “என் நேரம் முடிந்துவிட்டது” என்றும் கதறி எழுதியுள்ளார். மேலும் சோனியா காயங்களுடன் மனமுடைந்த நிலையில் இருக்கும் 4 நிமிட வீடியோ ஒன்றையும் ஹால் தனது போனில் பதிவு செய்துள்ளார். அதன் பின்னர், ஒகலா வனப்பகுதிக்குச் சென்று சோனியாவைக் கத்தியால் நான்கு முறை குத்திக் கொன்று, ஆழமற்ற புதைகுழி ஒன்றில் புதைத்துவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
விசாரணையில் இறங்கிய மேரியன் கவுண்டி காவல்துறை, சோனியாவின் உடலைக் கைப்பற்றியதுடன் அவரது இரத்தக் கறை படிந்த கத்தியை வைத்து ஹாலைக் கைது செய்தது. கைது செய்யப்பட்ட ஹால் மீது ஆட்கடத்தல் மற்றும் முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. சிறையிலிருந்து தனது மனைவியிடம் பேசிய ஹால், “சோனியா விரும்பியதையே தான் செய்ததாகவும், தான் எந்தத் தவறும் செய்யவில்லை” என்றும் கூறி நியாயப்படுத்த முயன்றுள்ளார். இருப்பினும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், இந்த விசித்திர கொலை வழக்கின் விசாரணை இந்த ஆண்டின் பிற்பகுதியில் நீதிமன்றத்திற்கு வரவுள்ளது.
