LATEST NEWS
அடச்சீ.. இவங்க இன்னும் திருந்தலையா..? “தண்ணீர் கேட்டாருனு குடுத்தேன்… அப்புறம் நடந்த கொடூரம்..” ஜெப்டோ டெலிவரி பாயால் உறைந்துபோன பெண்..!!!
ஜெப்டோ டெலிவரி ஊழியர் ஒருவர், ஆர்டரை வழங்கிய பின் குடிநீர் கேட்பது போல் நடித்து, வீட்டிற்குள் நுழையப் பலமுறை அனுமதி கேட்டுத் துன்புறுத்தியதாகப் பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான் பலமுறை மறுத்தும், அந்த ஊழியர் மீண்டும் மீண்டும் அழைப்பு மணியை அடித்து, கேட்டைத் தட்டி அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதாக அப்பெண் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து செயலி வாயிலாகப் புகார் அளித்தபோது, நிறுவனத்திடமிருந்து தானியங்கிப் பதில் மட்டுமே கிடைத்ததாகக் கூறித் தனது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, விரைவு வணிக நிறுவனங்களில் பணியாற்றும் டெலிவரி ஊழியர்களின் குற்றப் பின்னணி மற்றும் முகவரி சரிபார்ப்புகளைக் கடுமையாக்க வேண்டும் என்றும், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் இணையவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர். இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள ஜெப்டோ நிறுவனம், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அப்பெண்ணிடம் ஆர்டர் விவரங்களைக் கேட்டு நேரடிச் செய்தியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
