CRIME
அடச்சீ.. இவரெல்லாம் ஒரு அப்பாவா..? 40 லட்சம் வரதட்சணைக்காக பெற்ற மகளையே கத்தியால் குத்திய கொடூரம்.. பெங்களூருவை உலுக்கிய பகீர் சம்பவம்..!!
பெங்களூருவில் வரதட்சணைப் பணத்திற்காகத் பெற்ற மகளையே தந்தை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. வருங்கால மருமகனிடம் தந்தை நாகேந்திரா ரூ.40 லட்சம் வரதட்சணை கேட்டதாகக் கூறப்படுகிறது. தந்தையின் இந்தச் செயலை அவரது மகளான துர்கா கடுமையாக எதிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை, கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் தனது மகளைப் பார்க்க வேண்டும் எனக் கூறி உள்ளே நுழைந்து, அனைவரின் கண்முன்னே துர்காவின் கழுத்து மற்றும் நெஞ்சில் பலமுறை கத்தியால் குத்தியுள்ளார்.
இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய துர்காவை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துத் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே குடும்பத்தில் வரதட்சணை விவகாரமாகப் பெரிய அளவில் தகராறு நிலவி வந்த சூழலில், கல்லூரிக்கே சென்று பெற்ற மகளைக் கொடூரமாகத் தாக்கிய தந்தை நாகேந்திராவை காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
