LATEST NEWS
எடப்பாடிக்கு அடுத்தடுத்த பேரதிர்ச்சி..! “தேர்தல் முடிஞ்சாச்சு… கூட்டணிக்கே குட்பாய்..!” அதிமுகவில் இருந்து வெளியேறிய முக்கிய கட்சி.. தமிழக அரசியலில் திடீர் பூகம்பம்..!!
அதிமுக கூட்டணியில் இருந்து புரட்சி பாரதம் கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, சட்டமன்றத் தேர்தலொடு அதிமுகவுடனான கூட்டணி ஒப்பந்தமும் நிறைவடைந்துவிட்டதாகத் தெளிவுபடுத்தியுள்ளார். இது தேர்தல் களம் முடிந்த பிறகு ஏற்பட்டுள்ள புதிய அரசியல் மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கே.வி. குப்பம் தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்ட பூவை ஜெகன்மூர்த்தி, கடுமையான போட்டிக்கிடையே இரண்டாமிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, தற்போது புரட்சி பாரதம் கட்சியும் விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து தோழமைக் கட்சிகள் கூட்டணியை விட்டு விலகி வருவது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய அரசியல் அதிர்ச்சியையும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளதாகப் பார்க்கப்படுகிறது.
