LATEST NEWS
ஐய்யோ கொடுமையே… எலும்பு முறிவு ஒரு காலில்… ஆபரேஷன் மறு காலில்..! டாக்டரின் அலட்சியத்தால் கதறும் குடும்பம்..! ரூ.8 லட்சம் நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
பீகார் மாநிலம் சிவானைச் சேர்ந்த ஜான்கி குன்வர் என்பவரின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எக்ஸ்-ரே அறிக்கைகள் அனைத்தும் பெறப்பட்ட நிலையில், அவருக்குப் பரிசோதனை செய்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், மருத்துவரின் பெரும் அலட்சியப் போக்கால், எலும்பு முறிவு ஏற்பட்ட வலது காலிற்குப் பதிலாக, அவருடைய இடது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
மருத்துவரின் இந்தச் செயலால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, மீண்டும் அவருடைய வலது காலிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவ சேவை மற்றும் சிகிச்சையில் ஏற்பட்ட இந்த கடுமையான அலட்சியத்தைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட நோயாளி தரப்பில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் (District Consumer Disputes Redressal Commission) அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரை விசாரித்த நுகர்வோர் ஆணையம், மருத்துவ ஆவணங்கள், எக்ஸ்-ரே அறிக்கைகள் மற்றும் வழக்கு தொடர்பான அனைத்து சான்றுகளையும் விரிவாக ஆய்வு செய்தது. முடிவில், மருத்துவர் தரப்பில் கடுமையான சேவை குறைபாடு மற்றும் அலட்சியம் நடந்துள்ளது என்பதை ஆணையம் உறுதி செய்தது. இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட நோயாளிக்கு நஷ்டஈடாக ₹8 லட்சம், அவர் அனுபவித்த மன உளைச்சல் மற்றும் உடல் உபாதைகளுக்காக ₹20 ஆயிரம் மற்றும் வழக்குச் செலவுக்காக ₹5 ஆயிரம் என மொத்தம் வழங்க வேண்டும் என்று மருத்துவருக்கு ஆணையம் உத்தரவிட்டது.
