LATEST NEWS
“எதைச் சாப்பிடணும் எனக்குத் தெரியும்..!” அமைச்சர் ஆதவ் அர்ஜுனுக்கு கே.என்.நேருவின் மரண மாஸ் ரிப்ளை.. சட்டசபையையே அதிரவைத்த ரேஷன் அரிசி பஞ்சாயத்து..!!
தமிழகத்தில் ரேஷன் அரிசி பயன்பாடு குறித்து ஆளும் தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுகவினரிடையே சட்டப்பேரவையில் காரசாரமான விவாதம் அரங்கேறியுள்ளது. ரேஷன் அரிசியைச் சிலர் ஆடுகளுக்கும், கோழிகளுக்கும் தீவனமாகப் பயன்படுத்தி வருகிறார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில், அதற்குப் பதில் தரும் விதமாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்குச் சர்க்கரை நோய் கம்மியாகும் என்பதால் அவரே ரேஷன் அரிசிதான் சாப்பிடுகிறார் என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கே.என்.நேருவுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் நிலம் இருந்தாலும், ஒரு பரம ஏழையைப் போல அவர் ரேஷன் அரிசி சாப்பிடுவதாகப் புதுத் தகவலைச் சொல்லியுள்ளார் என அமைச்சர் ஆதவன் அர்ஜுனா விமர்சித்துள்ளார். இதற்கு விளக்கமளித்த கே.என்.நேரு, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் இருந்தாலும் எதைச் சாப்பிட வேண்டுமோ அதைத்தான் சாப்பிட முடியும் என்றும், மருத்துவரின் அறிவுரைப்படியே தான் ரேஷன் அரிசி சாப்பிடுவதாகவும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
