LATEST NEWS
சட்டத்தின் உச்சகட்ட சவுக்கடி.. 4 மாதத்தில் 22 மரண தண்டனை.. குற்றவாளிகளை நடுங்க வைத்த ரியல் ‘சிங்கம்’ நீதிபதி.. யார் இந்த ரவிக்குமார் திவாகர்..? ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்த நீதிபதி..!!
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் விரைவு நீதிமன்றத்தின் நீதிபதியான ரவிக்குமார் திவாகர், கடந்த 4 மாதங்களில் மட்டும் 22 பேருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இவரது இந்த தொடர் கடுமையான தீர்ப்புகளால், குற்றவாளிகள் மட்டுமின்றி பல வழக்கறிஞர்களும் அச்சமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இவரது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேலும் 100-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளிலும் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையான மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக, வழக்கறிஞர்களின் பீதியைத் தொடர்ந்து, நிர்வாக உத்தரவின் மூலம் பல வழக்குகள் வேறு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றன.
