அடப்பாவமே..! மின்சாரம் பாய்ந்ததாகப் பரவிய ஒரே ஒரு வதந்தி… பீகார் அசோக்தாம் கோவிலில் உயிர் பிழைக்க அலறியடித்து ஓடி… 8 பெண்கள் பரிதாப பலியான அதிர்ச்சிச் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடப்பாவமே..! மின்சாரம் பாய்ந்ததாகப் பரவிய ஒரே ஒரு வதந்தி… பீகார் அசோக்தாம் கோவிலில் உயிர் பிழைக்க அலறியடித்து ஓடி… 8 பெண்கள் பரிதாப பலியான அதிர்ச்சிச் சம்பவம்..!!

Published

on

பீகார் மாநிலம் லக்கீசராய் பகுதியில் உள்ள புகழ்பெற்ற அசோக்தாம் கோவிலில், சாவன் மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமை மற்றும் நாக பஞ்சமி திருநாளை முன்னிட்டு சிவபெருமானுக்கு நீர் ஊற்றி வழிபாடு செய்ய பெருமளவில் பக்தர்கள் கூடியிருந்தனர். அப்போது ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பெண் பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் 9 பக்தர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடக்கத்தில் 11,000 வோல்ட் மின்சாரம் தாக்கியதால் இந்த விபத்து நேரிட்டதாக தகவல்கள் வெளியான போதிலும், சம்பவ இடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததாகவும், கூட்ட நெரிசலில் நசுங்கியே உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்றும் மாவட்ட ஆட்சியர் சைலேந்திர குமார் மற்றும் கூடுதல் மாவட்ட ஆட்சியர் நீரஜ் குமார் விளக்கமளித்துள்ளனர்.

இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து நிர்வாகம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அசோக்தாம் ரயில் நிறுத்தத்தில் ஒரே நேரத்தில் இருபுறங்களிலிருந்தும் ரயில்கள் வந்து இறங்கியதாக தெரியவந்துள்ளது. ரயிலில் இருந்து இறங்கிய சிலர் திடீரென ஓடத் தொடங்கியதால், அங்கு இருந்த ஒரு மின் கம்பம் கீழே விழுந்தது. உடனே, மின்சாரம் பாய்ந்துவிட்டதாக பரவிய வதந்தியால் அங்கிருந்த மக்களிடையே கடும் பீதியும் பதற்றமும் ஏற்பட்டது. உயிருக்குப் பயந்து பக்தர்கள் நாலாப்புறமும் சிதறி ஓடியதால் கூட்ட நெரிசல் தீவிரமடைந்து, கீழே விழுந்த பக்தர்கள் கூட்டத்தின் கால்களில் மிதிபட்டனர்.

Advertisement

சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் காவல்துறையினரும் நிர்வாக அதிகாரிகளும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இச்சம்பவத்திற்குப் பிறகு கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கூட்டம் எவ்வாறு கட்டுப்பாட்டை மீறியது என்பது குறித்தும், இந்த அசம்பாவிதத்திற்கான காரணங்கள் குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆன்மீகத் தலங்களில் கூட்ட மேலாண்மை மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு குறித்த தீவிர கேள்விகளை இந்த சம்பவம் எழுப்பியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in