LATEST NEWS
பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… செப்டம்பர் 17 முதல் தேர்வு… தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு..!!
பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு தேதி மற்றும் விடுமுறை குறித்து அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் 17-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 25-ம் தேதி வரை காலாண்டு தேர்வுகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை மொத்தம் 9 நாள்களுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த விடுமுறை நாள்களில் மாணவர்களுக்கு எவ்வித வகுப்புகளும் நடத்தக் கூடாது எனப் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
