LATEST NEWS
BREAKING: தவெக கூட்டணியின் பெயர் இதுதான்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள புதிய கூட்டணிக்கு ’மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக சூட்டப்பட்டுள்ளது. சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்தத் தீவிர ஆலோசனையின் போது, வரவிருக்கும் இடைத்தேர்தல் வியூகங்கள் மற்றும் அடுத்தகட்ட அரசியல் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு, ஒருமனதாக இந்தப் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தவெக தலைவருடன் கூட்டணிக் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பலரும் பங்கேற்று தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள வேளையில், தவெகவின் இந்த புதிய கூட்டணியின் பெயர்ப் பலகை மற்றும் அரசியல் நகர்வு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும், அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
