DISTRICT NEWS
திருவாரூரில் பரபரப்பு..! தாசில்தார் ஆபீசில் டீசல் ஊற்றி தீ வைக்க முயன்ற நபர்.. அடுத்து நடந்த ட்விஸ்ட்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!
திருவாரூரில் பட்டா கிடைக்காத ஆத்திரத்தில் நபர் ஒருவர் திடீரென வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்து, அங்கிருந்த அரசு ஆவணங்கள் மீது டீசலை ஊற்றி தீ வைக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அரசு ஊழியர்கள், கோபத்துடன் அந்த நபரை பிடித்து சரமாரியாகத் தாக்கும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
திருவாரூர் : பட்டா வழங்காத ஆத்திரத்தில் திடீரென கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகுந்து அங்கிருந்த ஆவணங்கள் மீது டீசலை ஊற்றி தீ வைத்து கொளுத்த முயன்ற நபரால் பெரும் பரபரப்பு எற்பட்டது..இதனால் ஆத்திரமடைந்த அரசு ஊழியர்கள் அந்த நபரை தாக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது..#Thiruvarur |… pic.twitter.com/7AKoEk5ajZ— PttvOnlinenews (@PttvNewsX) August 20, 2026
நீண்ட நாட்களாக அலைந்தும் பட்டா வழங்கப்படாததால் ஏற்பட்ட விரக்தியே அந்த நபரை இந்த அதிரடி முடிவுக்குத் தூண்டியுள்ளது. இருப்பினும், அரசு அலுவலகத்திற்குள் புகுந்து ஆவணங்களை எரிக்க முயன்றதும், அதற்குப் பதிவாகப் பாதுகாப்புப் பணியில் இருக்க வேண்டிய அரசு ஊழியர்களே சட்டத்தைக் கையில் எடுத்து அந்த நபரைத் தாக்கியதும் அப்பகுதியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
