CRIME
“பிளீஸ் சித்தப்பா என்னை விட்ருங்க…” +2 மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தி கணவர்… 3 மாத கர்ப்பமான மாணவி, தலைமறைவான நபருக்கு போலீஸ் வலை..!!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு 3 மாத கர்ப்பமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி பிளஸ்-2 படித்து வரும் நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மிரட்டப்பட்டு இந்த கொடூரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் சிறுமியின் சித்தியின் கணவரான மகேந்திரன் (40) என்பவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளின் அடிப்படையில், உரிய அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் ராமநாதபுரம் சைல்டு லைன் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, திருவாடானை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள மகேந்திரனைப் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
