CRIME
பகீர்..! காதலியின் நெஞ்சில் இருந் ‘வேறொருவன்’ பெயர் டாட்டூ.. நடுரோட்டில் 3 குண்டுகளை பாய்ச்சி கொன்ற காதலன்… அடுத்த நடந்த பயங்கரம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், காதலியின் நெஞ்சில் வேறொரு இளைஞனின் பெயர் பச்சை குத்தப்பட்டிருந்ததை கண்டு ஆத்திரமடைந்த காதலன், நடுரோட்டில் காதலியைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12ஆம் வகுப்பு படித்து வரும் அனுஷ்கா (23) என்ற மாணவியின் நெஞ்சில் ‘ஆர்யன்’ என்று பச்சை குத்தப்பட்டிருந்ததால், அவரது காதலனான ஆதித்யா (26) கடுமையான கோபத்தில் இருந்துள்ளார்.
புதன்கிழமை மாலை மாணவி வகுப்பை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, வழியில் மறித்த ஆதித்யா அந்தப் பச்சை குத்தல் குறித்துக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மாணவி பதில் கூற மறுத்ததால் ஆத்திரமடைந்த ஆதித்யா, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மாணவியின் தலை மற்றும் வயிற்றில் மூன்று முறை சுட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மாணவி சரிந்ததைக் கண்டு, அப்பகுதி மக்கள் ஓடி வருவதைப் பார்த்துப் பயந்து, ஆதித்யா அதே துப்பாக்கியால் தனது நெஞ்சில் சுட்டுக்கொண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட மாணவி, சுபாரதி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அவரது வயிற்றில் இருந்த இரண்டு குண்டுகளை எடுத்துவிட்ட போதிலும், ஒரு குண்டு இன்னமும் அவரது தலையில் சிக்கியுள்ளதால் மாணவியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. போலீஸ் விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட ஆதித்யா அப்பகுதியின் பிரபல ரவுடி என்பதும், அவன் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், 10 நாட்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
