அடச்சீ.. இவரெல்லாம் ஒரு வாத்தியாரா..? 5-ஆம் வகுப்பு மாணவர்களிடையே பயங்கர மோதல்.. வேடிக்கை பார்த்த ஆசிரியர்.. இறுதியில் நேர்ந்த சோகம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!! – cinefeeds
Connect with us

CRIME

அடச்சீ.. இவரெல்லாம் ஒரு வாத்தியாரா..? 5-ஆம் வகுப்பு மாணவர்களிடையே பயங்கர மோதல்.. வேடிக்கை பார்த்த ஆசிரியர்.. இறுதியில் நேர்ந்த சோகம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!!

Published

on

கௌசாம்பி மாவட்டம் சார்வா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஹாத்பூர் சுத்வார் அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்களுக்கிடையே வகுப்பறைக்குள் திடீரெனப் பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் போது வகுப்பிலிருந்த ஆசிரியர் அதைக் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்ததாகக் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த மாணவர் மேல் சிகிச்சைக்காகப் பிரயாக்ராஜ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

कौशाम्बी ।

कौशाम्बी के प्राथमिक विद्यालय पहाड़पुर सुधवर में दर्दनाक हादसा।
कक्षा 5 के दो छात्रों के बीच क्लास में हुई मारपीट।
परिजनों का आरोप- शिक्षक बने रहे मूकदर्शक, नहीं कराया बचाव।
मारपीट में गंभीर रूप से घायल छात्र को प्रयागराज किया गया रेफर।
इलाज के दौरान छात्र की मौत,… pic.twitter.com/rscYHwhCQI— शिक्षक वाणी (@sirjistp) July 30, 2026

இச்சம்பவம் குறித்த செய்தி பரவியதும் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் திரளாகப் பள்ளியை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடமை தவறிய மற்றும் அலட்சியமாகச் செயல்பட்ட ஆசிரியர் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றனர். சிறுவனின் மரணம் அவரது குடும்பத்தினரையும் அக்கிராம மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in