கணவன் 15 துண்டுகளாகக் கொலை… காட்டிொடுத்த மகள்..! தூக்கு பயத்தில் சிறைக்குள் சுந்தரகாண்டம் ஓதும் கொடூரத் தாய்..!! – cinefeeds
Connect with us

CRIME

கணவன் 15 துண்டுகளாகக் கொலை… காட்டிொடுத்த மகள்..! தூக்கு பயத்தில் சிறைக்குள் சுந்தரகாண்டம் ஓதும் கொடூரத் தாய்..!!

Published

on

மீரட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரபல ‘நீல டிரம் கொலை வழக்கின்’ முக்கியக் குற்றவாளியான முஸ்கான் மீதான நீதிமன்ற விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தன் கள்ளக் காதலுக்காகச் சொந்தக் கணவனையே 15 துண்டுகளாக வெட்டி, நீல நிற டிரம்மில் போட்டுச் சிமெண்ட் பூசி கொடூரமாகக் கொலை செய்த இந்த உண்மையை முஸ்கானின் மூத்த மகளே வெளிச்சத்திற்குப் கொண்டுவந்தார். மரண தண்டனை வரை கடுமையான தண்டனை விதிக்கப்படலாம் என்ற பயத்தில், சிறைக்குள் இருக்கும் முஸ்கான் தினமும் காலை மற்றும் மாலையில் சுந்தரகாண்ட பாராயணம் செய்வது, தீவிர ஆன்மீக வழிபாடுகளில் ஈடுபடுவது எனத் தன்னை மாற்றிக் கொண்டுள்ளார்.

சிறைக்குள் பிறந்த தன் இரண்டாவது பெண் குழந்தையின் பெயரைக் கடவுளிடம் வேண்டிய பிரார்த்தனையின் அடையாளமாக ‘ராதா’ என்பதிலிருந்து ‘மன்னத்’ என்று அவர் மாற்றியுள்ளார். மூத்த குழந்தை கணவனின் குடும்பத்தினர் பராமரிப்பில் இருக்கும் நிலையில், சிறையில் இருக்கும் இந்தச் சிறிய பச்சிளம் குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பு மட்டுமே அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் சிறையின் வழக்கமான கடினப் பணிகளிலிருந்து விலக்களிக்கப்பட்டு, குழந்தையைக் கவனிப்பது, பூஜை செய்வது மற்றும் சுந்தரகாண்டம் வாசிப்பது என அவரது தினசரி வாழ்க்கை சுருங்கிப்போயுள்ளது.

Advertisement

கைதான நாள் முதல் இன்று வரை முஸ்கானைப் பார்க்க அவரது குடும்பத்தினர் எவரும் சிறைக்கு வரவில்லை என்பதால், அவர் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே தன் மகளுடன் நாட்களைக் கழித்து வருகிறார். இதற்கிடையே, இவ்வழக்கின் மற்றொரு குற்றவாளியான சாஹிலின் சகோதரர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளதால் வழக்கு விசாரணை மேலும் பரபரப்படைந்துள்ளது. அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்து இறுதித் தீர்ப்புக்காக நாடு முழுதும் எதிர்பார்த்திருக்கும் நிலையில், தண்டனையிலிருந்து தப்பிக்கச் சிறைக்குள் முஸ்கான் செய்யும் ஆன்மீக நாடகங்களும் நடவடிக்கைகளும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in