CRIME
கல்யாணமாகி 6 மாசம் கூட ஆகல… மனைவியை தரதரவென இழுத்துச் சென்று கல்தூணில் மோதிக் கொன்ற கணவன்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்… சிவகங்கையில் அதிர்ச்சி..!!
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அண்ணாநகரைச் சேர்ந்தவர் பிரகாஷ் (37). இவருக்கும் உய்யவந்தாள் (40) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. குடும்பப் பிரச்சினை காரணமாக, கணவன்-மனைவி இருவருக்கும் இடையே திருமணமான நாள் முதலே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்றும் இவர்களுக்குள் வழக்கம்போல கடுமையான சண்டை வெடித்தது. ஆத்திரமடைந்த பிரகாஷ், தனது மனைவி உய்யவந்தாளைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். மேலும் அவரை தரதரவென இழுத்துச் சென்றபோது, அங்கிருந்த கல்தூணில் உய்யவந்தாளின் தலை பலமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவி இறந்ததைத் தொடர்ந்து, பிரகாஷ் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் நேராகச் சென்று சரணடைந்தார். அவரை உடனடியாகக் கைது செய்த போலீசார், உய்யவந்தாளின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இக்கொலை வழக்கு குறித்து போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
