LATEST NEWS
சூப்பர் நியூஸ் மக்களே..! தமிழகம் முழுவதும் அனைத்து கோவில்களிலும் வரப்போகும் புதிய மாற்றம்… முதல்வர் விஜய் அதிரடி முடிவு.!!
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பொதுக்கோயில்களிலும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, கோயில்களுக்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய ஏதுவாக தரிசன வரிசைகளை முறைப்படுத்தவும், சிறப்பு பாதைகளை அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கோடை மற்றும் விசேஷ காலங்களைக் கருத்தில் கொண்டு தூய்மையான குடிநீர் வசதி, தடையற்ற சுகாதாரமான சூழல் மற்றும் அவசர மருத்துவ உதவிகளுக்கான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவர் கட்டளையிட்டுள்ளார்.
அனைத்து தரப்பு மக்களும், குறிப்பாக முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள் எளிதாக தரிசனம் செய்யும் வகையில் தற்போதைய வரிசை முறைகளில் தேவையான மாற்றங்களைச் செய்ய உயரதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் வசதிக்கும் முன்னுரிமை அளித்து, இந்த அவசர கால நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல்கள் பறந்துள்ளன.
