CRIME
“என்னை காப்பாத்துங்க.. பணத்துக்காக மருமகளையே அடகு வைத்த மாமியார்..!” கதவை பூட்டிவிட்டு நடந்த கொடூரம்… நெஞ்சை நடுங்கவைக்கும் பின்னணி..!!
பெங்களூரைச் சேர்ந்த திவ்யா என்பவரிடம், வயநாடு மாவட்டத்தில் வயதான பாட்டி ஒருவரைப் பராமரிக்கும் வேலை இருக்கிறது என்றும் நல்ல சம்பளம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறி மாமியாரே நேரடியாக அழைத்துச் சென்று விட்டுள்ளார். ஆனால், அங்கு வந்த மனோஜ் என்பவர் திவ்யாவைக் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த அக்கிரமத்திற்கு வீட்டின் உரிமையாளரான பிந்து உடந்தையாக இருந்து மனோஜிடமிருந்து பெருந்தொகையைப் பணமாகப் பெற்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட திவ்யா காவல்நிலையம் செல்ல முயன்றபோது, ஆபாச வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வாழ்க்கையைச் சீரழித்து விடுவதாக மிரட்டிய பிந்து, இந்தச் சதித்திட்டத்திற்குத் திவ்யாவின் மாமியாரும் உடந்தை என்ற உண்மையை உடைத்துள்ளார். இதனால் தப்ப முடியாமல் தவித்த திவ்யா, நாளுக்கு நாள் கொடுமை அதிகமானதால் உறவினர்களின் உதவியுடன் மானந்தவாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்த போலிஸார், முதன்மை குற்றவாளியான மாமியார், மனோஜ் மற்றும் தலைமறைவாக முயன்ற பிந்து ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
