LATEST NEWS
அடக் கொடுமையே..! பிஞ்சுத் தோள்ல இவ்வளவு பெரிய சுமையா..? ஒன்றரை வயதுத் தம்பிக்காக தாயாக மாறிய 9-ஆம் வகுப்பு மாணவி… நெஞ்சை உருக்கும் சிறுமியின் கதை..!!
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியைச் சேர்ந்த அஸ்மிதா தமாங் என்ற 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியின் மனதைத் தொடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவருக்குச் சமீபத்தில் தாய் இறந்துவிட்ட நிலையில், குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக இவரது தந்தை வெளியூர் சென்று வேலை பார்த்து வருகிறார். இதனால் வீட்டில் உள்ள ஒன்றரை வயதுடைய தம்பியைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லாத நிலை ஏற்பட்டது.
இத்தகைய சவாலான சூழ்நிலையிலும் அஸ்மிதா தனது தைரியத்தை இழக்காமலும், படிப்பைக் கைவிடாமலும் தன் தம்பியைப் பராமரிக்கும் பொறுப்பைத் தானே ஏற்றுக்கொண்டார். வைரலாகும் வீடியோவில், அஸ்மிதா வகுப்பறையில் அமர்ந்து ஆசிரியர் நடத்துவதைக் கவனித்து படிக்கும் அதே வேளையில், தனது தம்பியை மடியில் வைத்துத் தாயைப் போல அன்போடு அரவணைத்துக் கொள்கிறார்.
https://www.instagram.com/reel/DbZmgbDIbh0/?utm_source=ig_web_button_share_sheet
ஒருபுறம் சிறந்த மாணவியாகவும், மறுபுறம் தாயைப் போல தம்பியைக் காக்கும் சகோதரியாகவும் இருக்கும் அஸ்மிதாவின் இந்த வீடியோ இணையவாசிகளின் நெஞ்சங்களை நெகிழ வைத்துள்ளது. எவ்வளவு பெரிய கஷ்டங்கள் வந்தாலும் விடாமுயற்சியும் அர்ப்பணிப்பும் இருந்தால் எதையும் எதிர்கொள்ளலாம் என்பதற்கு அஸ்மிதாவின் இந்தச் செயல் சான்றாக அமைந்துள்ளதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பலரும் அவரது தைரியத்தைப் பாராட்டி வருகின்றனர்.
