LATEST NEWS
“என் மகனைக் கொன்னுட்டாங்க..!” 11 வயது சிறுவன் பலியான ஆத்திரத்தில் தாய் செய்த காரியம்.. போர்க்களமாக மாறிய மருத்துவமனை… நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!
பீகாரின் மதுபானி பகுதியில் உள்ள சதர் மருத்துவமனையில், பைக் விபத்தில் படுகாயமடைந்த 11 வயது சிறுவன் ராகேஷ் குமார் சிகிச்சையின் போது உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்திற்குப் பிறகு தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்குச் சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும், பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் தாயார் மற்றும் குடும்பத்தினர், மருத்துவர்களின் அலட்சியமே சிறுவனின் இறப்பிற்கு காரணம் எனச் சாட்டி மருத்துவமனை வளாகத்தை அடித்து நொறுக்கி சுமார் ஒரு மணி நேரம் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
11 वर्षीय बेटे की मौत के बाद मां ने किया अस्पताल में तांडव…
घटना बिहार के मधुबनी की है
जहां 11 वर्षीय राकेश कुमार एक बाइक दुर्कघाटना में गंभीर रूप से घायल हो गया जिसके बाद उसे मधुबनी के सदर अस्पताल ले जाया गया जहां उसकी इलाज के दौरान मौत हो गई
परिवार वालों ने अस्पताल वो… pic.twitter.com/xwqrb0o265— Syed Fizah (@syedfizah) August 1, 2026
சிறுவனின் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததாகவும், நுரையீரலில் நீர் கோர்த்துக் கொண்டதால் தீவிரமான சிக்கல்கள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலை உருவானதாகவும் அங்குள்ள மருத்துவர் தெரிவித்துள்ளார். தங்களால் முடிந்த அனைத்து சிகிச்சைகளையும் அளித்தும் சிறுவனைக் காப்பாற்ற முடியாமல் போனதாக மருத்துவர்கள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறை மற்றும் அலட்சியக் குற்றச்சாட்டு தொடர்பாகத் தற்போது காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
