ஐயோ கொடுமையே… ஸ்கூட்டரைக் காப்பாத்தப்போய் கடைசியில இப்படி ஆயிடுச்சே..! கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் பங்க் அருகே தலைகீழாக கவிழ்ந்த திருமணப் பேருந்து..! நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஐயோ கொடுமையே… ஸ்கூட்டரைக் காப்பாத்தப்போய் கடைசியில இப்படி ஆயிடுச்சே..! கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் பங்க் அருகே தலைகீழாக கவிழ்ந்த திருமணப் பேருந்து..! நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!

Published

on

கேரளாவில் திருமண வீட்டாரை ஏற்றிச் சென்ற சுற்றுலாப் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 30 பேர் காயமடைந்தனர். இதில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எர்ணாகுளம் மாவட்டம் கூத்தாட்டுகுளம் பகுதியில் உள்ள காக்கூர் என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த நேரத்தில் அந்தப் பேருந்தில் சுமார் 35 பயணிகள் வரை பயணித்ததாகக் கூறப்படுகிறது.

காலடியில் இருந்து இளஞ்சி நோக்கித் திருமண வீட்டாரை ஏற்றிச் சென்றபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, பேருந்தின் இடது புறத்தில் சென்று கொண்டிருந்த ஒரு ஸ்கூட்டர் திடீரென வலது புறத்தை நோக்கித் திரும்பியுள்ளது. அந்த ஸ்கூட்டர் மீது மோதாமல் இருக்கப் பேருந்து ஓட்டுநர் உடனடியாகப் பேருந்தை திருப்ப முயற்சித்துள்ளார்.

Advertisement

மழையின் காரணமாகச் சாலை ஈரப்பதத்துடன் இருந்ததால், பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வழுக்கி, அங்கிருந்த பெட்ரோல் பங்க் அருகில் கவிழ்ந்தது. திருப்பப்பட்ட வேகத்தில் பேருந்தின் பின்புற பகுதி ஸ்கூட்டர் மீதும் மோதியது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பெட்ரோல் பங்க் நோக்கிச் சென்ற போதிலும், அதன் மீது மோதாமல் நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in