LATEST NEWS
ஐயோ.. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடுக்கடலில் நீந்தி தப்பியோடும் இளைஞர்கள்.. மிரண்டு போக வைக்கும் காரணம்.. நெஞ்சைப் பதறவைக்கும் பகீர் வீடியோ..!!
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நிலவி வரும் கடுமையான பஞ்சம், வேலையின்மை மற்றும் வறுமைச் சூழல் காரணமாக, அந்நாட்டு இளைஞர்கள் தங்கள் உயிரைப் பணையம் வைத்து ஆபத்தான கடல் வழியே அண்டை நாடுகளுக்குத் தப்பியோடும் போக்கு அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் நடுகடலில் நீந்தியபடியே ஸ்பெயின் நாட்டின் எல்லைப் பகுதியான கியூட்டா நகரை நோக்கிப் படையெடுத்து வரும் திடுக்கிடும் காட்சிகள் வெளியாகி உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஒரு வார இடைவெளியில் மட்டும் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கடல் மார்க்கமாக ஸ்பெயின் எல்லையை அடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
INSANE FOOTAGE: Thousands of migrants continue crossing from Morocco into Spain’s Ceuta enclave, as local officials reportedly urge Madrid to declare a national emergency. pic.twitter.com/dlbbKOjBV1— Breaking911 (@Breaking911) July 30, 2026
சொந்த நாட்டின் பொருளாதாரச் சுமையிலிருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் இவ்வாறு தஞ்சம் புகுந்து வருவதால், அப்பகுதியில் உள்ள அகதிகள் முகாம்கள் அனைத்தும் முற்றிலும் நிரம்பி வழிவதாகப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எல்லைப் பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் போதிலும், இந்தத் தொடர் புலம்பெயர்வு கடுமையான மனிதநேய நெருக்கடியை உருவாக்கியுள்ளது. உயிரைப் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் ஆபத்தான கடல் வழியைத் தேர்ந்தெடுத்துத் தப்பியோடும் இந்தச் சம்பவம் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
