LATEST NEWS
“தஞ்சாவூர்ல பேசும்போது ஜாக்கிரதையா பேசணும்” கீழே இருந்து யாராவது பேசி நம்மள மாட்டி விட்ருவாங்க… அப்புறம் இரவோடு இரவா கைது பண்ணிடுவாங்க… உதயநிதி பேச்சு..!!
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கடந்த சில மாதங்களாகவே தஞ்சாவூர் மாவட்டத்திற்குத் தொடர்ந்து வருகை தருவதாகக் குறிப்பிட்டார். “நான் வரவில்லை என்றாலும் இந்த அரசே என்னை கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்து வருகிறது” என்று கூறிய அவர், தஞ்சையில் பேசும்போது மிகவும் கவனமாகப் பேச வேண்டும் எனவும், கீழ் மட்டத்தில் பேசப்படும் விஷயங்களால் நாம் சிக்கலில் மாட்டிவிடும் நிலை உருவாகிறது என்றும் பேசினார்.
கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி தஞ்சாவூரில் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தியதை நினைவு கூர்ந்த அவர், காவிரியில் தண்ணீர் வரவில்லை என்று பேசியதற்காகவே கோபமடைந்து தன்னை இரவோடு இரவாகக் காவல்துறையினரை அனுப்பி கைது செய்ததாகத் தெரிவித்தார். டெல்டா மண்டலம் எப்போதும் திமுகவின் கோட்டை என்பதை சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நிரூபித்துவிட்டதாகவும், இங்குள்ள 30 தொகுதிகளில் ஆளுங்கட்சி 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய புதிய அரசு அமைந்ததில் இருந்து கடந்த 105 நாட்களில் அதிகளவில் பாதிக்கப்பட்டது விவசாயப் பெருங்குடி மக்கள்தான் என்று குற்றம்சாட்டினார். மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்த கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில், மேட்டூர் அணையில் இருந்து சரியான தேதியான ஜூன் 12-ஆம் தேதியே வழக்கமாகத் தண்ணீர் திறக்கப்பட்டது என்பதையும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.
