LATEST NEWS
இலையில் கடைசியாக வைக்கப்பட்ட ஊறுகாய் காங்கிரஸ்… விஜய் கொடுத்த சீட்டை வச்சு மாணிக்கம் தாகூர் திமிரா பேசுறாரா..? காங்கிரஸ் தலைவருக்கு பாஜக கடும் கண்டனம்..!!
தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் கிடைத்தது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் பேசிய பேச்சிற்கு, பாஜகவின் வினோஜ் பி. செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்காமல் இருந்திருந்தால், அனைவரின் அரசியல் கதையையும் அமித் ஷா முடித்திருப்பார் என்று மாணிக்கம் தாகூர் கூறிய கருத்தை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தவெக அமைச்சரவை என்ற முழு விருந்து பரிமாறப்பட்ட இலையில் ஏதோ ஒன்று குறையாகத் தென்பட, கடைசியாக வைக்கப்பட்ட ஊறுகாய்தான் காங்கிரஸ் கட்சி என்று வினோஜ் பி. செல்வம் சாடியுள்ளார். ஊறுகாய்க்கு நடு இலையில் இடம் கொடுத்ததைப் போலத்தான், அமைச்சரவையில் காங்கிரஸிற்கு முதலமைச்சர் விஜய் இடம் கொடுத்துள்ளார் என்றும் அவர் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார்.
ஒரு அரை நூற்றாண்டு காலத்திற்குப் பிறகு, தமிழக அமைச்சரவையில் பங்கேற்கும் ஒரு நல்வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்துள்ளது. இதனை எண்ணிப் பெருமிதம் கொள்ளாமல், மாணிக்கம் தாகூர் திமிராகப் பேசிக் கொண்டிருக்கிறார் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த இருவேறு தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையேயான கருத்து மோதல் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
