LATEST NEWS
“அவனை சும்மா விடக் கூடாதுன்னு கும்பிடல” CM விஜய் முதல் அமைச்சர்கள் வரை ஒருமையில் பேசிய திமுக MLA.. அடுத்த கைது இவர்தானா..? தமிழக அரசியலில் பரபரப்பு…!!
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் திருவையாறு எம்.எல்.ஏ. சந்திரசேகரன் பேசிய பேச்சு, அரசியல் களத்தில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையிலேயே மேடையில் வைத்து இந்த உரை நிகழ்த்தப்பட்டது.
திருமண விழாவில் பேசிய எம்.எல்.ஏ. சந்திரசேகரன், “தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத்தின் போது கூட்டத்தில் ஒருவர் ‘திரிஷா வாழ்க’ என கோஷம் எழுப்பினார். ஆனால், உதயநிதி பேசும்போது காவிரியின் நீர் பிரச்சனை குறித்துத்தான் பேசினார். எனினும், இவ்விரண்டையும் தொடர்புபடுத்தி உதயநிதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்” என்று அப்போதைய சம்பவங்களை நினைவு கூர்ந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மறுநாள் சட்டசபைக்கு வந்த முதலமைச்சர் வணங்கியதாகவும், ஆனால் “அவனை சும்மா விடக்கூடாது” என்பதால் நாங்கள் யாரும் அவருக்குத் திரும்ப வணக்கம் செலுத்தவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும், இதன் மூலம் எதிர்தரப்பு நிலைதடுமாறிப் போனதாகக் கூறிய அவர், சட்டசபையில் நடந்த இந்த சம்பவத்தை ஒருமையில் விவரித்துப் பேசினார்.
அவையின் உரையின் போது, சட்ட அமைச்சர் நிர்மல்குமார், பெண் அமைச்சர் கீர்த்தனா மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோரை பெயரைச் சொல்லி ஒருமையில் பேசி விமர்சித்தார். “கீர்த்தனா என்ற அமைச்சர் படுத்தும் பாடு பெரிய பாடாக இருக்கிறது; நாம் செய்த சாதனைகளையெல்லாம் அவளே செய்தது போலக் கூறிக்கொள்கிறார்” என்று அடுக்கடுக்கான புகார்களைக் காட்டமாகக் முன்வைத்தார்.
தனது உரையில் மாமா என்ற வார்த்தைகளைப் பயன்படுத்திய போது,நான் பொட்டு மாமா என்று தான் சொல்லப்போகிறேன் என்று நினைத்து துணை சபாநாயகர் தலையிட்டு “அந்த வார்த்தையை உபயோகிக்கக் கூடாது, அதற்கு அரசாணை (G.O.) இருக்கிறதா?” எனக் கேட்டு எச்சரித்ததாக சந்திரசேகரன் குறிப்பிட்டார். மேலும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அய்யயோ முடியல அவ்வளவு டயலாக் விடுறான்.
மேலும் நடிகர் ரஜினிகாந்தின் புகழ்பெற்ற திரைப்பட வசனமான “தப்பு பண்ணிட்டயே சிங்காரம்” என்பதைக் குறிப்பிட்டு, “தளபதியை என்னைக்கு கை வைத்தானோ, அன்றிலிருந்து திமுக மிகப்பெரிய எழுச்சியை அடைந்துள்ளது” எனக் கூறினார். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை பொதுமேடையில் ஒருமையில் பேசி சந்திரசேகரன் பேசிய இந்த உரை தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
