LATEST NEWS
யாருமே எதிர்பார்க்காத மெகா ட்விஸ்ட்.. சபரீசனை நேரடியாக களமிறக்கும் ஸ்டாலின்.. முகம் சுளித்த உதயநிதி.. திமுக-வுக்குள் வெடித்த மெகா அதிகாரப் போட்டி..!!
திமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட வயது வரம்பு மற்றும் 110 புதிய மாவட்டப் பிரிப்பு போன்ற மெகா மறுசீரமைப்பு நடவடிக்கைகளை, அறிவாலயத்தில் இருந்தபடியே சபரீசன் நேரடியாக மேற்பார்வை செய்யட்டும் என்று கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுவரை திரைமறைவு வியூக வகுப்பாளராக மட்டுமே செயல்பட்டு வந்த சபரீசன், தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவாலயத்திற்குள் நுழைவது கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகளில் அவரது செல்வாக்கு அதிகரிப்பதைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், திமுக-வில் எந்தவொரு அதிகாரப்பூர்வப் பொறுப்பிலும் இல்லாத சபரீசன், நேரடியாகக் கட்சித் தலைமையகத்திற்குள் நுழைந்து நிர்வாகப் பணிகளைக் கவனிப்பதை உதயநிதி ஸ்டாலின் முற்றிலும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. கட்சியின் முக்கிய முகமாக இருக்கும் உதயநிதிக்கு, சபரீசனின் இந்த திடீர் நேரடித் தலையீடு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மகன் மற்றும் மருமகன் ஆகிய இரு துருவங்களுக்கு இடையே எழுந்துள்ள இந்த உச்சகட்ட அதிகாரப் பஞ்சாயத்தை, கட்சியின் ஒற்றுமை கெடாமல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எவ்வாறு கையாண்டு சுமுக முடிவுக்குக் கொண்டு வரப்போகிறார் என்பதே தற்போது ஒட்டுமொத்த தமிழக அரசியலின் மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது.
