VIDEOS
“உன் குரல் ஒரு பொம்பள மாதிரி இருக்கு..!” அழுத மாணவனை உலகளாவிய எழுத்தாளராக மாற்றிய ஆசிரியையின் ‘அந்த’ ஒற்றைக் கேள்வி..! இணையத்தை உலுக்கிய வைரல் வீடியோ..!!
புகழ்பெற்ற எழுத்தாளரும் கல்வியாளருமான தீபக் ரமோலா, தனது பெண் போன்ற குரல் அமைப்பிற்காகப் பள்ளிப் பருவத்தில் எதிர்கொண்ட கடுமையான கேலிப் பேச்சுகள் மற்றும் அதிலிருந்து அவர் எவ்வாறு மீண்டு வந்தார் என்பது குறித்துப் பகிர்ந்த உருக்கமான வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. “உன் குரல் ஒரு குழந்தையைப் போல அல்லது பெண்ணைப் போல ஒலிக்கிறது; ஆண்களுக்குரிய கம்பீரம் இல்லை” என்று சிறு வயது முதலே சுற்றியிருந்தவர்கள் அவரைக் கேலி செய்து வந்ததால், அவர் தனது குரல் குறித்துப் பெரும் தாழ்வுமனப்பான்மை கொண்டுள்ளார். ஒருமுறை 11-ஆம் வகுப்பில் இந்த மனவேதனையால் அவர் அழுதுகொண்டிருந்தபோது, அவரது ஆங்கில ஆசிரியை பிரகதி கபூர் அவரிடம் பேசிய ‘அந்த’ ஒரு சக்திவாய்ந்த உரையாடல் அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையையும், சிந்தனையையும் மாற்றிப்போட்டுள்ளது.
https://www.instagram.com/reel/Db99FH7htjO/?utm_source=ig_web_button_share_sheet
“உனக்கு உன்னுடைய குரல் பிடித்துள்ளதா?” என்று ஆசிரியை கேட்ட கேள்விக்கு, “நாளை காலையில் உன்னால் பேச முடியாமல் போனால் எப்படி இருக்கும்?” என்று அவர் யோசிக்க வைத்தபோதுதான், தன் குரலின் முக்கியத்துவத்தை தீபக் உணர்ந்துள்ளார். “உனக்கு உன் குரல் பிடித்திருந்தால், அதனை நீ முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும், உனது கதையை நீதான் உருவாக்க வேண்டும்” என்ற ஆசிரியையின் அந்த அறிவுரை, தீபக்கிற்குள் ஒரு புதிய அசுர நம்பிக்கையை விதைத்தது. ஒரு காலத்தில் கேலிக்குள்ளான அதே குரலின் மூலம் அவர் தற்போது உலக நாடுகள் பலவற்றிற்குப் பயணம் செய்து, முன்னணிப் பல்கலைக்கழகங்களில் உரையாற்றிப் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறார். மற்றவர்களின் விமர்சனங்களுக்காக நாம் என்றுமே மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை என்ற இவரது உன்னதமான செய்தி, தற்போது லட்சக்கணக்கான சமூக ஊடகப் பயனர்களின் நெஞ்சைத் தொட்டு வைரலாகி வருகிறது.
