LATEST NEWS
BREAKING: அக்- 2 முதல் தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம்… முதல்வர் விஜய்யின் மாஸ் அறிவிப்பு..!!
தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் புறநகர் பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அதிரடியாக அறிவித்துள்ளார். ‘வெற்றிப்பயணம் கட்டணமில்லா பேருந்து சேவை’ என்ற பெயரில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய திட்டம், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று முதல் மாநிலம் முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரவுள்ளது. ஏற்கனவே நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணித்து வந்த பெண்களுக்கு, தற்போது மாவட்ட எல்லைகளைக் கடந்து செல்லும் புறநகர் பேருந்துகளிலும் இந்தச் சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பெண்கள் வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் தங்களின் அன்றாடத் தேவைகளுக்காக வெளிமாவட்டங்களுக்குச் சென்று வர ஆகும் பயணச் செலவு முற்றிலும் மிச்சமாகும் என முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டுள்ளார். பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை மேம்படுத்தவும், அவர்களின் பாதுகாப்பான பொதுப் போக்குவரத்தை உறுதி செய்யவும் இந்த ‘வெற்றிப்பயணம்’ திட்டம் பெரிதும் துணையாக இருக்கும் என அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பேருந்து அடையாளக் குறியீடுகள் விரைவில் போக்குவரத்துத் துறையால் வெளியிடப்படவுள்ளன.
