“என் பொண்டாட்டி செத்ததுக்கு நீ தான் காரணம்டா..!” கள்ளக்காதலனைத் தூக்க கூலிப்படை மூலம் கணவர் போட்ட மாஸ் பிளான்.. ஆனால் நடந்ததோ வேறு.. நீதிமன்றத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் பொண்டாட்டி செத்ததுக்கு நீ தான் காரணம்டா..!” கள்ளக்காதலனைத் தூக்க கூலிப்படை மூலம் கணவர் போட்ட மாஸ் பிளான்.. ஆனால் நடந்ததோ வேறு.. நீதிமன்றத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்..!!

Published

on

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த விசிக பெண் கவுன்சிலர் கோமதிக்கும், பிரபல ரவுடி ஜோசப் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. கடந்த 2023-ஆம் ஆண்டு ஆத்திரமடைந்த கோமதியின் கணவர் ஸ்டீபன் ராஜ் தனது மனைவியை வெட்டிக் கொலை செய்தார். இந்நிலையில் கைதாகி ஜாமினில் வெளியே வந்த ரவுடி ஜோசப், வேறொரு வழக்கு தொடர்பாகத் திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்துள்ளார். தனது மனைவியின் கொலைக்குக் காரணமான கள்ளக்காதலன் ஜோசப்பைப் பழிவாங்க எண்ணி, ஸ்டீபன் ராஜ் கூலிப்படையுடன் சேர்ந்து அவரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளார்.

இந்தத் திட்டம் குறித்துச் சைபர் கிரைம் மூலம் திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரனித்திற்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். இதற்கிடையில், நீதிமன்ற வளாகத்திலேயே ஜோசப்பைக் கொலை செய்யும் நோக்கில், ஸ்டீபன் ராஜ் தலைமையிலான 6 பேர் கொண்ட கூலிப்படை கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் ஆட்டோவில் காத்திருந்தது. ஆனால், மதியம் வரை ஜோசப் நீதிமன்றத்தை விட்டு வெளியே வராததால், அக்கூம்பல் வேடங்கியநல்லூர் பகுதிக்கு மது அருந்தச் சென்றுள்ளது. அப்போது, ரகசியத் தகவலின் பேரில் அங்குச் சென்ற தனிப்படை போலீசார் அக்கும்பலை அதிரடியாகச் சுற்றி வளைத்தனர்.

Advertisement

போலீசாரைக் கண்டதும் ஸ்டீபன் ராஜ் உள்ளிட்ட 3 பேர் தப்பியோடிய நிலையில், அசோக்குமார் மற்றும் பிரபாகரன் ஆகிய இருவரைப் போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மற்றும் மிளகாய் பொடி பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்த போலீசார், கைது செய்யப்பட்ட இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா காட்சியைப் போல நீதிமன்ற வளாகத்திற்கு அருகே கூலிப்படையை வைத்துச் Sketch போட்ட சம்பவம், திருவள்ளூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய ஸ்டீபன் ராஜ் உள்ளிட்டோரைப் போலீசார் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in