CRIME
“இவனெல்லாம் ஒரு மனுஷனா..?” கர்ப்பிணி மனைவிக்கும் துரோகம்.. கள்ளக்காதலியையும் கொடூரக் கொலை செய்த மிருகம்.. குலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!
ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் காஞ்சரபாலத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநரான பொலிசெட்டி சுரேஷ் என்பவர், தனது கர்ப்பிணி மனைவியைப் பார்த்துக்கொள்வதற்காக வீட்டிற்கு அழைத்த இளம் பெண்ணுடன் முறையற்ற உறவில் ஈடுபட்டுள்ளார். மனைவி பெற்றோர் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில், அந்த இளம் பெண் சுரேஷைத் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சுரேஷ், அப்பெண்ணைச் சுவரில் மோதி கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
கொலைக்குப் பிறகு ஆதாரங்களை அழிப்பதற்காக, சடலத்தை ஒரு பெரிய சூட்கேஸில் அடைத்த சுரேஷ், அதனை ரயில் மூலம் அண்டை மாநிலமான ஒடிசாவின் ராயகடா மாவட்டத்திற்கு எடுத்துச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வீசிவிட்டுத் திரும்பியுள்ளார். சந்தேகத்திற்கிடமாக இருந்த அந்த சூட்கேஸைக் கண்ட உள்ளூர்வாசிகள் அளித்த தகவலின் பேரில் சடலத்தை மீட்ட ஒடிசா காவல்துறையினர், தீவிர விசாரணையில் இறங்கி கொலையாளி விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பதைக் கண்டறிந்து அவரைக் கைது செய்தனர்.
