“சீனியர்களின் கொடூர சித்திரவதை…” முதலாமாண்டு BTech மாணவர் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“சீனியர்களின் கொடூர சித்திரவதை…” முதலாமாண்டு BTech மாணவர் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஆர்.கே. கோயல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பயின்று வந்த முதலாமாண்டு பி.டெக் மாணவர் ஹர்ஷ் சிசோடியா, விடுதியின் 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காசியாபாத் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த எதிர்பாராத மரணம் சக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த மரணம் குறித்து உயிரிழந்த மாணவனின் தந்தை காவல்துறையில் கடுமையான புகார் ஒன்றை அளித்துள்ளார். தனது மகனைக் கல்லூரியின் மூத்த மாணவர்கள் மிகக் கொடூரமான முறையில் ரேகிங் செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும், அந்தத் சித்திரவதையைத் தாங்க முடியாமல் தான் தனது மகன் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காசியாபாத் போலீசார் தீவிர வழக்குப் பதிவு செய்து, ரேகிங் குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை குறித்தும், இதில் தொடர்புடைய மூத்த மாணவர்கள் யார் யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in